Gør som tusindvis af andre bogelskere
Tilmeld dig nyhedsbrevet og få gode tilbud og inspiration til din næste læsning.
Ved tilmelding accepterer du vores persondatapolitik.Du kan altid afmelde dig igen.
அய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை. அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்தையும் பேணிக்கொள்பவை. அய்யப்பன் இப்பற்றின்மை மீதான தனது உற்று நோக்கலைக்கொண்டு காட்சியும் கதையுமாக அங்கே கவிந்திருக்கும் அன்பின் வலைப்பின்னலை நமக்கு உளவியலாகவும் கவித்துவமாகவும் தந்துவிடுகிறார். தானாக நிறையும் கிணற்றடி கதைகளில் துலங்கிய பெண் மனோபாவங்கள் தொட்டு இயற்கையும் பெண்ணுமாகிய உறவு நிலைகளில் இவ்வுலகை அனாயாசமாக துல்லிதமாக விவரிக்கும் இவ்வகை யதார்த்தம் நவீன பாடுபொருட்களில் நமது இடத்தையும் காலத்தையும் அளவிட்டுச் சொல்ல முயல்கின்றன. -யவனிகா ஶ்ரீராம்
கேள்வி நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில் துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்துகொள்வதல்ல. சமரசம் என் ஆன்மாவில் படியும் கறை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. சொல்லப்போனால் துக்ளக்கில் எழுதியபோது எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதற்கும் நான் அஞ்சவில்லை. எனக்கு 9 வயதுச் சிறுமியிடமும் 90 வயது முதியவரிடமும் சொல்வதற்குச் செய்திகள் இருக்கின்றன. துக்ளக் கட்டுரையைப் படித்துவிட்டு ராமமூர்த்தி என்ற பெரியவர் எனக்கு ஃபோன் செய்தார். பார்த்தால் அவர் எனக்கு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். ஆசானாக இருந்தவர் என்னை ஆசான் என்று சொன்னபோது அழுதுவிட்டேன்.
Tilmeld dig nyhedsbrevet og få gode tilbud og inspiration til din næste læsning.
Ved tilmelding accepterer du vores persondatapolitik.