Bag om Kuselar Saritham
குசேலர் சரிதம் என்னும் இந்நூற்கு முதனூல் தமிழிலே, வல்லூர்த் தேவராச பிள்ளையால் இயற்றப் பட்ட குசேலோபாக்கியானம் என்னும் நூலாகும். அஃது செய்யுள் நடையில் இயற்றப்பட்டதாதலின் கற்றோ ரன்றி மற்றோரால் எளிதிலுணர்ந்து பயன்பெற முடியாததாகும். அதனால் அதனை, ஓர் உரை நடை நூலாக எழுதின் யாவர்க்கும் பயன்படுமென்று கருதி, அவ்வாறே இதனை எழுதினாம். எழுதியபின், இதனை ஈழகேசரிப் பத்திராதிபர் நா. பொன்னையா அவர்கட்கும் காண்பித்தாம். அவர்கள் இதனைப் படித்துப் பார்த்து மிகமகிழ்ந்து தாமே இதனைப் பதித்து உலகிற்குப் பயன்படுத்துவதாகக் கூறித் தம்பால் அளிக்கு மாறு வேண்டினார்கள். அவ்வாறே யாமும் அளித்தனம். காலந்தோறும் நிகழும் சம்பவ விசேஷங்களைக் கண்கூடாகக் கண்டு கேட்டறிந்தேனும், நிகழாதவொன்றை ஓரொரு காரியார்த்தமாக நிகழ்ந்த தாகப் பாவித்தேனும் எடுத்துக்கூறும் அவற்றது வரலாறே சரித்திரமெனப்படும். ஆகவே சரித்திரம் சம்பவசரித்திரமெனவும், அசம்பவசரித்திர மெனவும் இருவகைப்படும். இரண்டும் பயனளவில் ஒன்றற்கொன்று சமமேயாயினும், சம்பவசரித்திரம் மெய்ம்மையாக நிகழ்ந்ததொரு வரலா றென் றுணரக்கிடப்பதாதலின், மற்றதனிலும் இஃது உள்ளத்தின் கண் விசேஷ கிளர்ச்சியை உண்டாக்கும் காத்தது.
Vis mere